
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு தெரிவுக்கான தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் தற்காலிக நிர்வாகக் குழுவாக செயற்படவுள்ளனர்.
இந்தக் குழுவுக்கு பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஷ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உச்சித்த விக்ரமசிங்க மற்றும் அமல் எதிரிசூரிய ஆகியோர் நிர்வாகக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
மே தாம் 20 ஆம் திகதி நிர்வாகக் குழு தெரிவுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு தற்காலிக நிர்வாகக் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.