
file photo: Facebook/ President’s Media-Tamil
வட மாகாணத்தின் “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நாளை நடைபெறவுள்ளது.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” 17 வது நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
வெடிவைத்தகல்லு மற்றும் அதனை சூழவுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றதைக் கருத்தில் கொண்டே, இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணி உறுதி தொடர்பான பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்வது, குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்தல், போகஸ்வெவ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல், உர களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணித்தல் போன்ற பிரச்சினைகளை கிராம மக்கள் முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
‘ஜனாதிபதியின் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வின் நோக்கம், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் கிராமத்துக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகளை கேட்டு, உடனடித் தீர்வு வழங்குவதாகும்’ என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒருதரப்பு நியாயங்களை மாத்திரம் கவனத்திற்கொள்வது, தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதை தாமதப்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.