July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை ஜனாதிபதி குற்றவாளிகளை ஆதரிக்க மாட்டார்’: வெளியுறவு செயலாளர்

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, குற்றவாளிகளின் பக்கத்தை எடுக்க மாட்டார் என்று வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், ‘இலங்கை ஜனாதிபதி வழங்கிய சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்புகள்’ தொடர்பான கேள்விக்கே, வெளியுறவு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான தமிழ் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வருட யுத்த நிறைவின் பின்னர், மனித உரிமை மேம்படுத்தல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

‘இலங்கையைப் போன்று வேறு எந்தவொரு நாடும் மனித உரிமைகளில் ஆர்வம் காட்டவில்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஒரு தலைமுறையாக போர் இருந்ததாகவும், அதிலிருந்து முழுமையாக குணமடையக் காலமெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.