
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த சிலுவைப்பாதை பவனி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இயேசுவின் திருப்பாடுகளை வெளிப்படுத்தும் நாற்பது நாட்கள் கொண்ட தவக்கால வழிபாட்டின் இறுதி நாளான இன்று, பெரிய வெள்ளி விசேட வழிபாட்டு நிகழ்வாக இந்த சிலுவைப்பாதை பவனி இடம்பெற்றது.
தேவாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிலுவைப்பாதை பவனியானது புளியந்தீவின் பல பாதைகளினூடாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.