April 24, 2025 21:29:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆயரின் பெயரில் புனித சதுக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்’: காணாமல் போனோரின் உறவினர்கள் கோரிக்கை

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரில் புனித சதுக்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்று வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று நடத்தப்பட்டது.

இதன்போது, பேராயரின் மறைவு, தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தக் காலத்தில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆற்றிய பணி மதிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்காக ஒரு புனிதமான சதுக்கத்தை உருவாக்கி அவரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.