
இலங்கையில் பல பிரதேசங்களிலும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, மொணராகலை, பொலனறுவை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக உஷ்ணத்தை உணரக் கூடியதாக இருக்கும் என்று அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியளவுக்கு உஷ்ணம் நிலவும் எனவும், இதனால் இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்என்றும், இந்தக் காலப்பகுதியில் அதிக நீரைப் பருகுவது அவசிமாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.