July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக ஊடகங்களில் தனிமனித கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதை குற்றமாக்கவுள்ளது இலங்கை

Social Media / Facebook Instagram Twitter Common Image

சமூக ஊடகங்களில் தனிமனித கௌரவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதை குற்றமாக்கி, இலங்கையில் சட்டம் இயற்றப்படவுள்ளது.

சமூக ஊடகங்களில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உட்பட கௌரவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை குற்றமாக்கும் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட பயனாளர்களால் மேற்கொள்ளப்படும் கருத்துக்களை உள்ளடக்கியதா அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட தீங்கிழைக்கும் பிரசாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதா என்பதில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமனிதனின் கௌரவமும் அடிப்படை மனித உரிமைகளில் உள்ளடங்குவதன் அடிப்படையில், தனிமனித கௌரவம் சீர்குலைக்கப்படுவதைக் குற்றமாக்கும் சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.