April 20, 2025 16:31:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மன்னாருக்கு எடுத்துச் செல்லப்படும்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நேற்று முற்பகல் முதல் அவரின் உடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதுடன், அதனை தொடர்ந்து இன்று நண்பகல் ஆயரின் உடல் பவனியாக மன்னாருக்கு கொண்டு செல்லப்படும்.

இதன்பின்னர் இன்று மாலை முதல் மன்னார் ஆயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் உடல் மக்கள் அஞ்சலிக்கா வைக்கப்படவுள்ளதாக இறுதிக் கிரியை ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேரலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பேராயத்தில் இடம்பெறும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலின் பின்னர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஆயருக்கு அஞ்சலி செலுத்த வருவோர் மற்றும் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வோர் சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.