தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
கிரகரி வாவிக்கு அருகில் நேற்று முதல் வசந்தகால நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர், நுவரெலியா மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி என பலரும் கலந்துகொண்டனர்.
வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தயம், குதிரைப்பந்தயம், பூப்பந்து, டேபள் டெனிஸ், குழிப்பந்தாட்டம், கிரகரி வாவியில் நீர் விளையாட்டு, மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் மட்டுப்படுத்தப்பட்ட களியாட்ட விழாக்கள் நடைபெறவுள்ளன.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சில விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தக் காலப்பகுதியில் நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.