தம்புள்ளை நகர சபை தலைவர் ஜாலிய ஓபதவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு அந்த வாகனத்தை பரிசோதித்த போது அதனுள் கலன்களில் பெருமளவு தேங்காய் எண்ணெய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த தேங்காய் எண்ணெய்யை வாகனத்தில் கொண்டு செல்வதற்கோ, அது மனித பாவனைக்கு உகந்ததா என்பது தொடர்பாகவோ எந்தவித ஆவணமும் அந்த வாகனத்தை அந்த இடத்திற்கு கொண்டுவந்தவரிடம் இருந்திருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 ஆயிரத்திற்கும் அதிகமான லீட்டர் தேங்காய் எண்ணெய் கலன்களில் இருப்பதாகவும், இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதன்படி இன்றைய தினம் அந்த தேங்காய் எண்ணெய்யின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தம்புள்ளை நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.