November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காய் எண்ணெய் சர்ச்சை; 55 மாதிரிகளின் முடிவுகள் வெளியானது

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் நாடளாவிய ரீதியில் எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 55 மாதிரிகளின் முடிவுகளை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த 55 மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘எப்போலடெக்ஸின்’ வேதிப்பொருள் இல்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் 125 எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியன பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன.

இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மிகுதி 70 மாதிரிகளின் முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.