July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேங்காய் எண்ணெய் சர்ச்சை; வருகிறது புதிய வர்த்தமானி அறிவித்தல்’; பந்துல குணவர்தன

இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகைகளுடன் கலத்தல் மற்றும் கலக்கப்பட்ட எண்ணெய்யை இறக்குமதி செய்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில், 2016 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இறக்குமதி செய்யும் எண்ணெய்யை எண்ணெய் வகைகளுடன் கலப்பதற்கும் அவ்வாறு கலவை செய்யப்படும் விபரம் தொடர்பில் கொள்கலன்களில் காட்சிப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானிக்கு அமையவே பல வகையான எண்ணெய்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே நாட்டில் தற்போது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய “அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கிய எண்ணெய் வகையும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .

எனவே இதனை தடுக்கும் வகையில் பழைய வர்த்தமானி அறிவித்தலை காலாவதியாக்கி புதிய வர்த்தமானியை வெளியிட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.