January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியாவில் ஆட்டோ மீது பாரஊர்தி குடைசாய்ந்ததில் மூவர் பலி!

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்த கொள்கலன் வாகனமொன்று, ஆட்டோ ஒன்றின் மீது குடைசாய்ந்ததினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆட்டோவில் பயணித்த பண்டாரவளை – எல்ல பகுதியைச் சேர்ந்த 18, 51 மற்றும் 52 வயதுடைய மூன்று பெண்கள் வாகனத்திற்குள் நசுங்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், கொழும்பில் இருந்து அதிக சுமையுடன் வரும் வாகனங்களே அதிகளவில் விபத்துக்கு உள்ளாகுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.