January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்”: சம்பந்தன்

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவானது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைக் குரலாக திகழ்ந்த ஆயர் இராயப்பு ஜோசப், மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகியவர் எனவும், தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இன மத மொழிகளுக்கு அப்பால், சாதாரண மக்களின் உரிமைகளுக்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதோடு, அவரின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொள்வதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.