
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ள பெருமளவு மஞ்சள் மூடைகள் மன்னார் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையின் போது மொத்தமாக 902 கிலோ எடையுள்ள 19 மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு, மன்னார் பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகளை யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் கூறினர்.
இலங்கையில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு கிலோ மஞ்சளின் விலை 2500 ரூபாவையும் தாண்டியுள்ள நிலையிலேயே இவ்வாறான சட்டவிரோத கடத்தல்கள் இடம்பெறுகின்றன.