January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பதியப்படும் கட்சிகளை கண்காணிக்க விசேட குழுவை நியமிக்கிறது தேர்தல்கள் ஆணையம்

இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அரசியல் கட்சிகள் மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக தனியான கண்காணிப்பு குழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் தலைமையில் அமையவுள்ள ஐந்து பேரடங்கிய இந்தக் குழு, பதிவு செய்யப்படுகின்ற கட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் யாப்புகளில் மத மற்றும் இன ரீதியான உள்ளடக்கங்கள் உள்ளனவா என்பதையும் இந்தக் குழு ஆராயவுள்ளது.