
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 24 பேர் இன்று இலங்கையை வந்தடைந்தனர்.
2012, 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்தனர் எனக் கூறியே, இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
31 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 4 பேருமே அனுப்பப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நடைமுறைகளின் பின்னர் இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பண்டாரநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.