தெற்காசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் 60 சதவீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்காசியாவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துகின்ற நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதுடன், அதன் எண்ணிக்கை 69 சவீதமாக உள்ளது.
இதில் நேபாளத்தில் 53 சதவீதமானோரும், பாகிஸ்தானில் 51 சதவீதமானோரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள்.
இதேவேளை, தெற்காசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 சதவீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.