
எக்ஸ்ரே கதிர் இயந்திர பகுதி உத்தியோகத்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து மூன்று நாட்களாக நாடு பூராகவும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் முதல் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரை பெரிதும் சிரமத்தையும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகங்கள், சுகாதார அமைச்சுக்கு நீண்டகாலமாக தெரியப்படுத்தியும் தீர்வு காணப்படாத நிலையிலேயே புறக்கணிப்பில் ஈடுபடுவதாக எக்ஸ்ரே கதிர் இயந்திரப் பகுதி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.