ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பிரதான கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை வாரம் முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், நேற்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.