January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர், அமரர் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள சிலைக்கு அருகில், குறித்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் அஞ்சலியும், மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான பொன். செல்வராஜா, மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி. சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், கட்சியின் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.