January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன!

சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

பீஜிங்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 என்ற விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த தடுப்பூசிகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கினால், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனிடையே, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியதற்கு, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, சீன ஜனாதிபதி மற்றும் சீன அரசுக்கும்  நன்றி தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங், தேவைப்படும் காலங்களில் இலங்கைக்கு உதவ சீனா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் உள்ள சீன நாட்டுப் பிரஜைகளுக்கு இந்தத் தடுப்பூசியை முதலில் வழங்குவதற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு எடுத்த முடிவை அவர் பாராட்டினார்.

இதன்படி, நாட்டுக்கு கொண்டுவரப்படட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகள் முதலில் இலங்கையில் உள்ள 4500 சீனப் பிரஜைகளுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.