February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பாணந்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை வசூலித்தும் உள்ளார்.

இதனிடையே பண வசூலிப்பின் பின்னர் சந்தேகநபர் மாயமான நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான சந்தேக நகர் பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.