July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெர்மனியில் இருந்து 31 புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

ஜெர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிட கோரிக்கையாளர்களில் 31 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

31 புகலிட கோரிக்கையாளர்களும் ‘டசெல்டார்ப்’ விமான நிலையத்தினூடாக ஜெர்மனி அதிகாரிகளினால் 30 ஆம் திகதி வலுக் கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இன்று இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெர்மனியில் வசித்து வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் 100 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு முன்னாலும் மற்றும் விமான நிலைய பகுதிகளிலும் பல்வேறு சிவில் அமைப்புகளினால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புகலிடம் கோரிக்கையாளர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரத்தில் 31 புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.