ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கும் எதிர்பார்ப்பில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சி பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்ததாகவும், ஆனாலும் 13 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்கவே முயற்சித்து வருகின்றோம் என்றும் இதற்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.