January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோயை ஏற்படுத்தும் ‘100 க்கும் அதிகமான தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள்’ இறக்குமதி

புற்றுநோயை உருவாக்கும் ‘எப்போலடெக்ஸின்’ திரவம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய 100 க்கும் அதிகமான கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உணவுத் தர நிர்ணய நிறுவனத்தின் தலைவர் சித்திகா ஜி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

‘புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் அடங்கிய 13 கொள்கலன்கள் மட்டுமே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று அரசாங்கம் கூறி வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் ‘எப்போலடெக்ஸின்’ திரவம் கலக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் தலைவர் விஜித ரவிப்பிரிய மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.