May 14, 2025 4:11:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மிலிந்த மொரகொட தூதுவராக இந்தியா செல்வார்”: என்கிறார் உதய கம்மன்பில

மிலிந்த மொரகொடவை தூதுவராக நியமிக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அறிவிப்பு எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொடவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ள நிலையில் அதற்கு இந்தியா எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும், இலங்கை இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது பதிலளித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில, ”இவ்வாறான அறிவித்தல் எதுவும் அமைச்சரவைக்கு கிடைக்கவில்லை. நான் அறிந்த வகையில் மிலிந்த மொரகொட இந்தியாவுக்கு செல்வார்” என்று கூறியுள்ளார்.