ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நாட்டின் 1.7 பில்லியன் ரூபாயை சேமித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டில், ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக 3.02 பில்லியன் ரூபா செலவழித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய 2020 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் ரூபாயே செலவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 18 மாத காலப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காக 3.2 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நாட்டின் அதிகளவான பணத்தை சேமித்துள்ளதாகவும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.