November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

மன்னார்

நுண்கடனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்கள் அரசிற்கெதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது நுண்கடன் வழங்கிய நிதி நிறுவனங்களால் அறவிடப்படும் அறவீட்டு முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாம் வாக்குபோட்ட அரசியல் வாதிகள் அனைவரும் எம்மை கைவிட்டநிலையில் நுண்கடன் கம்பனிகளுக்கு இன்று இரையாகியுள்ளோம்.எனவே எமது கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் விழிப்புணர்வு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் இந்த விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட நுண் நிதி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் நுண் கடன் வழங்குவதை நிறுத்தக்கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இந்தப் போராட்டம் வடக்கு- கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.