November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரிவினையை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களுக்கும் இலங்கையில் தடை செய்யப்படும்”

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சகலரையும் இலங்கை அரசாங்கம் தடை செய்யும் என்று அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

7 புலம்பெயர் அமைப்புகளுக்கும், 388 நபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதமும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான கொள்கைகளை உடையவர்களுடன் இலங்கை அரசாங்கம் தொடர்புகளை பேண வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை பின்பற்றும் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்கள் மற்றும் நபர்களை அரசாங்கம் தடை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.