இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின் பிங்கிற்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பு ஒத்துழைப்புகளை பலப்படுத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தொடர்ந்தும் சீனா உதவியளிக்கும் எனவும், பலதரப்பு மேடைகளில் முகம்கொடுக்கும் அழுத்தங்கள் தொடர்பில் இலங்கைக்காக தொடர்ந்தும் தாம் முன்னிற்போம் எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐநா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய ஆதரவுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதிக்கு நன்றிகளை கூறியுள்ளார்.
இதன்போது கொழும்புத் துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீன உதவியில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.