July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எப்போலடெக்ஸின்’ கலந்த உணவுகள் குடல் புற்றுநோயை உருவாக்கும்; விசேட வைத்தியர் கலாநிதி அர்ஜுன டி சில்வா

எப்போலடெக்ஸின் திரவம் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை உணவுப்பாவனைக்கு எடுத்துக்கொண்டால் குடல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமென உடல் சார் விசேட வைத்தியர் கலாநிதி அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எப்போலடெக்ஸின் திரவம் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எப்போலடெக்ஸின் திரவம் கலக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் எப்போலடெக்ஸின் திரவம் புற்றுநோயை உருவாக்குவதாக பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எப்போலடெக்ஸின்  எனப்படும் திரவம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து வினவிய போதே கலாநிதி அர்ஜுன டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

‘எப்போலடெக்ஸின் திரவம் என்பது உணவுப்பொருட்களுக்கு ஒருபோதும் ஒவ்வாத ஒன்றாகும்.எனினும் நீண்டகால பாவனைகளுக்கு இந்த வகையான திரவங்களை பயன்படுத்துகின்றனர்.இந்த திரவமானது சிறிது சிறிதாக நீண்ட காலமாக உடலுக்குள் செல்லுமாயின் அதனால் குடல் புற்றுநோய் ஏற்படும். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாகும். அதுமட்டுமல்லாது, அதிகளவில் எப்போலடெக்ஸின் கலக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் வேளையில் வாந்தி, தலைச்சுற்று மற்றும் கண் பார்வையில் சிக்கல் நிலைமைகள் ஏற்படுவதையும் அவதானிக்க முடியும்.அதேபோல் உடல் சக்தி குறைவும் ஏற்படும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.