உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 263 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்வொரு தேவாலயத்துக்கும் பொறுப்பான மதகுருவுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தின வணக்க வழிபாடுகளை தடைகள் இன்றி நிறைவேற்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.