
(File photo)
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.