ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை கட்சியில் இருந்தும், மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே, கொழும்பு மாவட்ட நீதின்றம் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான அடுத்த விசாரணையின் போது, நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட ஐவருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்திற்கு முன்னர் தம்மிடம் நியாயமான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், இதன் விளைவாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கே.ஜி தம்மிக சந்திரரத்ன குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.