May 28, 2025 21:42:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரூபாய்க்கு எதிரான டொலரின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு உயர்வு

இலங்கை ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 201.77 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றிற்கான கொள்முதல் விலை ரூ .197.28 ஆக உள்ளது.

இது இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ள டொலருக்கான அதி கூடிய விற்பனை பெறுமதியாகும்.

இறுதியாக மார்ச் 17 அன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 201.75. ரூபாவாக சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.