எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட வாகன போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த விசேட வாகன போக்குவரத்து நடைமுறையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசேடமாக நீண்டதூர பயணங்களின் ஈடுபடும் பஸ்களில், சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.