May 23, 2025 17:40:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் பொலிஸ் சுற்றிவளைப்பு: 1120 பேர் கைது!

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 418 பேரும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 47 பேரும், ஊழல், மோசடி குற்றச்சாட்டில் 549 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதானவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.