January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவிட்டபுரத்தின் வரலாற்று நூலான ‘மாவையூர்’ வெளியீடு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தனின் வரலாறு மற்றும் மாவிட்டபுரத்தின் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கி யாழ்.பல்கலைக்கழகத்தின் சைவ சிந்தாந்த முதுகலைமானி குணரட்ணம் கோபிராஜ் எழுதிய “மாவையூர்” நூல் வெளியீட்டு விழா மாவை கந்தனின் யாத்திரிகர் மடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசியுரையினை மாவைக்கந்தனின் ஆதீனகர்த்தா மகாராயசிறி இரத்தின சபாவதிக்குருக்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ்.பல்கலைக்கழகத்தின் சைவசித் தாந்ததுறை தலைவர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன், தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.