இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் தினசரி நுகர்வுத் தேவை 300 முதல் 350 மெட்ரிக் டன் வரை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீபத்தில் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய்க் கொள்கலன்கள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தேங்காய் எண்ணெய் இறக்குமதியுடன் தொடர்புடைய மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.
நாட்டில் ஆண்டிற்கான தேங்காய் எண்ணெய்யின் தேவை 80,000 மெட்ரிக் டன் ஆக உள்ள நிலையில், உள்நாட்டில் 40,000 முதல் 50,000 மெட்ரிக் டன் வரையே உற்பத்தி செய்யப்படுகின்றது.
மிகுதி 30,000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்படுகின்றது. தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும்போது விலையும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.