January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது”

இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் 7 புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும், 300 ற்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர்பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புகள் தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், இந்த விடயம் குறித்து தற்போதே அறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து விரைவில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.