இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த மார்ச் 24ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள பூந்தோட்டம் மீள் ஒன்றிணைத்தல் நிலையத்தில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிகக் கட்டளை) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் ஒழுங்குவிதிகளின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பிற்கான (வன்முறையான மட்டு மீறிய மதக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு எதிரான தீவிரமயமற்ற தாக்குதல்) அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 12 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.