தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலப்பகுதியில் சன நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லும் போது திருடர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது அதிகளவிலான குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாகவும், இவற்றில் நிதி நிறுவனங்கள், நகையகங்கள், வர்தக நிலையங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுதல் மற்றும் தங்கச் சங்கிலி பறிப்பு ஆகிய சம்பவங்களே அதிகளவில் பதிவாகுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டு பண்டிகை காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சன நடமாட்டம் அதிகளவில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது திருடர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் விசேட பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.