May 29, 2025 9:42:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். புத்தூரில் ஆணொருவர் வெட்டிக் கொலை!

யாழ்ப்பாணம், புத்தூர் – வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருடன் இருந்த பழைய பகையை வைத்து சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.