யாழ்ப்பாணம், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி – வடக்கு பாற்பண்ணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 51 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி பொதுச் சந்தைக் கடைத் தொகுதி வியாபாரிகளுக்கும் அங்கும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், பாற்பண்ணை பிரதேசத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அங்கு 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாற்பணை கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேசத்திற்குள் வெளியார் நுழையாதவாறும், அங்குள்ளவர்கள் வெளியில் செல்லாதவாறும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ். நகரின் மத்தியப் பகுதி வெள்ளிக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.