January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா;வெளி மாவட்டத்தவர்களுக்கு தடை:100 பேருக்கு மட்டுமே அனுமதி

கிளிநொச்சி- புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த கண்டாவளை பிரதேச செயலகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கொவிட் 19 தொற்று அதிகரித்துவரும் நிலையில், பிரசித்தி பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

அரசாங்க அதிபரின் பணிப்பிற்கு அமைவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அவசர தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவேண்டியேற்பட்டதாக பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பொங்கல் நிகழ்விற்கு வெளி மாவட்டங்களிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், 100 பேருக்கு குறைவானவர்களே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயற்படுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், அறிவுறுத்தலுக்கமைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.