
திருகோணமலை, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.
ஈழத்திலுள்ள சக்தி பீடங்களில் தொன்மை கொண்ட திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டதுடன், திருத்தேரின் பின்னே அடியார்கள் அங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.