January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையை வெற்றிபெறச் செய்யும் கொள்கைகளையே எதிர்க்கட்சி விமர்சிக்கிறது’: ஜனாதிபதி கோட்டாபய

இலங்கையை வெற்றிபெறச் செய்யும் கொள்கைகளையே நாட்டின் எதிர்க்கட்சி விமர்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் தோல்வியடையும் போது, நாடு வீழ்ச்சிப் பாதையில் செல்வதைத் தடுக்க முடியாமல் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.