January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக மதரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது!

புத்தளம் பிரதேசத்தில் மதரசா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக மாத்தளை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.