
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழுவொன்று, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள சிறீதரனின் வீட்டிற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர்கள் வாள், கண்ணாடி போத்தல் மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்து சிறீதரனின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.